சென்னை: சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக தலைவர் கலைஞர் ஆட்சியால் தனி வட்டாட்சியர் அலுவலகம் பிரிக்கப்பட்டு இன்று வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொடர்ந்து இந்த மன்றத்தில் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கிறேன். எனவே, அதற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதே போல வட்டார போக்குவரத்து அலுவலகம், உணவு பொருள் வழங்கும் உதவி ஆணையர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, நீதிமன்றம் போன்ற கட்டிடங்கள் எல்லாம் இன்று வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த பகுதியில் 3 ஏக்கர் 92 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு அரசு ஒருங்கிணைந்த வளாகத்தை கட்டி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி தர அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று உறுப்பினர் கேட்டுள்ளார். இந்த ஆண்டு நிதி இருக்கும்பட்சத்தில் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் “ என்றார்.
The post பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சோழிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வளாகம் கட்ட வேண்டும்: சட்டசபையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.