மானாமதுரை, ஜூலை 10: தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுதுறையை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. மானாமதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, இளையான்குடி ஒன்றிய செயலாளர் சந்தியாகு, திருப்புவனம் ஒன்றிய செயலாளர் நீலமேகம் ஆகியோர் தலைமையில் மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தினை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மானாமதுரை ஒன்றிய சிபிஎம் செயலாளர் முனியராஜ், திருப்புவனம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் ஈஸ்வரன், இளையான்குடி ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர் ராஜூ, மானாமதுரை ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் காசிராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்
The post பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து மானாமதுரையில் மறியல் போராட்டம் 100க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.