பொது, தனியார் பங்களிப்பு மூலம் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை மேம்படுத்தும் பணி: நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் ஆணை

1 month ago 7

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 5, 6 மற்றும் 9வது (மெரினா மட்டும்) மண்டலங்களை உள்ளடக்கிய 372 இடங்களில் அமைந்துள்ள சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகளில் உள்ள 3,270 இருக்கைகளை ரூ.430.11 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்காக சலுகைதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்டிபென்டன்ட் இன்ஜினியர்’ என்ற கலந்தாலோசகர் மூலம் கண்காணிக்கப்பட்டு, பணிகளின் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் இத்திட்டத்தை அதே அளவில் செம்மையாக செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 7,166 இருக்கைகளுடன் கூடிய 1002 கழிப்பறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிப்பம்-2ன்கீழ் 1, 2, 3 மற்றும் 4வது மண்டலங்களில் உள்ள 285 இடங்களில் 2,301 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.362.60 கோடி மதிப்பீட்டிலும், சிப்பம்-3ன்கீழ் 7, 8, 9 மற்றும் 10வது மண்டலங்களில் 395 இடங்களில் உள்ள 2,760 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.455.43 கோடி மதிப்பீட்டிலும், சிப்பம்-4ன்கீழ் 11, 12, 13, 14 மற்றும் 15வது மண்டலங்களில் 322 இடங்களில் உள்ள 2,105 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.383.97 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கழிப்பறைகளை பராமரிக்கும் பணிக்கான செலவினங்கள், சலுகைதாரருக்கு முக்கிய செயல்பாட்டு அளவீடுகளின் அடிப்படையில் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.1,202 கோடி மதிப்பீட்டில் இப்பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

The post பொது, தனியார் பங்களிப்பு மூலம் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை மேம்படுத்தும் பணி: நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article