சென்னை,
தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- "உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.