அரூர், ஜன.14: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய நிகழ்வான மாட்டு பொங்கலன்று கால்நடைகளை குளிப்பாட்டி மூக்கணாங்கயிறு, கயிறு ஆகியவற்றை புதியதாக மாற்றுவதுடன் உடல் மற்றும் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவார்கள். அரூரில் மாடுகளுக்கான கயிறு மற்றும் பொங்கல் பானைகள் அமோகமாக விற்பனையானது. இந்த ஆண்டு பல வண்ணங்களில் டிஸ்கோ கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளது. விவசாயிகள் மூக்கணாங்கயிறு, கயிறு உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர். கயிறுகளின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் சற்றே அதிகரித்துள்ளது. அதேபோல் கலர்பொடிகள், கரும்பு, மஞ்சள் ஆகியவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
The post பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.