சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில் , பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர் பிரியா, எம்.பி. அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இன்று முதல் 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி 2.21 கோடி அரிசு அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு தரப்படுகிறது.