பொங்கல் பண்டிகைக்கு பஸ்களில் கடந்த ஆண்டை விட 27% பேர் கூடுதலாக முன்பதிவு

5 months ago 15

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் கடந்த ஆண்டை விட 27 சதவீதம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜன.10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்க கூடிய 2092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 8,121 பேருந்துகளும் ஒட்டு மொத்தமாக 23,987 பேருந்துகள் இயக்கப்பட்டது.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக 15ம் தேதிமுதல் 19ம் தேதிவரை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் 4,281 சிறப்பு பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 7,802 பேருந்துகளும் என ஆக மொத்தம் 21,153 பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும், இவ்வருடம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 168 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்பதிவு செய்து பயணம் செய்த 3,34,720 பயணிகளை விட 2025ம் ஆண்டு பொங்கல் விழா நாளில் 27 சதவிகிதம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகைக்கு பஸ்களில் கடந்த ஆண்டை விட 27% பேர் கூடுதலாக முன்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article