கரூர், ஜன. 21: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு பிறகு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு குறைவான மக்களே வந்திருந்ததால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பின்றி காணப்பட்டது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்து சென்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
வழக்கமாக, அதிகளவு குறைதீர் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வார்கள். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. தொடர் விடுமுறை க்கு பிறகு நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் போதிய மக்கள் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக பரபரப்புடன் காணப்படும் கலெக்டர் அலுவலகம் மக்கள் வர த்து குறைவால் பரபரப்பில்லாமல் இருந்தது.
The post பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் வருகை குறைவு appeared first on Dinakaran.