பொங்கலுக்கு வீடு சுத்தம் செய்யப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்!

3 hours ago 2

* திரைச் சீலைகள் மற்றும் பித்தளை வளையங்களை வினிகர் கலந்த நீரில் நன்குக் கொதிக்க வைத்தால் பளபளப்பாகி விடும்.
* தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் மேல் படிந்திருக்கும் பச்சைநிறத்தைப் போக்க வினிகரையும், உப்பையும் கலந்து நன்குத் தேய்த்து அலம்ப வேண்டும்.
* மெல்லிய டிஷ்யூ பேப்பர் மற்றும் செய்தித்தாள்களால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும்.
* பாத்திரங்களை அலம்பும் நீரில் அவ்வப்போது சிறு வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும். கைகளும் மென்மையாக இருக்கும்.
* வாஷ்பேசனில் ஏற்படும் மஞ்சள் நிறக் கறைகளைப் போக்க எலுமிச்சைச்சாறு (அ) வினிகரைக் கொண்டு தேய்த்தால் வெண்மையாக இருக்கும்.
* மீந்து போன துண்டு சோப்புக் கட்டிகளை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அது பாதி நிரம்பியவுடன் அதில் கொதிக்கும் நீரைக் கொட்டவும். இந்தக் கலவையைக் கொண்டு பாத்திரங்கள் கழுவலாம்.
* சோப்பு பெட்டியில் ஒரு துண்டு ஸ்பாஞ்சை வைத்து விட்டால் சோப்புக் கரைவதை தடுக்கலாம்.
* உலோகங்களின் மேல் உள்ள துருவைப் போக்க இங்கைக் கொண்டு துடைக்கலாம்.
* மரச்சாமான்கள் பளபளக்க மண்ணெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயை சமமாகக் கலந்து அதில் துணியை நனைத்து துடைக்கவும்.
* பிளாஸ்கில் உள்ள துர்வாடை போக அதன் உள்ளே மோருடன் உப்பைக் கலந்து ஊற்றி, நன்கு குலுக்கி அதைக் கொட்டி விட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி குலுக்கி கொட்டி விடவும்.
* பிளாஸ்டிக் வாளி, மக் சுத்தம் செய்ய விம், மண்ணெண்ணெய், உப்பு மூன்றையும் சம அளவாகக் கலந்து உள்ளேயும், வெளியேயும் பூசி 5 நிமிடத்துக்கு பிறகு கெட்டித் துணியால் அழுத்தித் தேய்த்து பிறகு வெயிலில் வைக்கவும்.
* புத்தகங்களின் மேல் எண்ணெய் கறைப் பட்டால் அந்த இடத்தில் இரண்டு பக்கமும் நிறைய டால்கம் பவுடரை தெளித்து பின் மெல்லிய துணியால் துடைத்தால் கறை மறையும்.
* குளிர் காலங்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரை நன்கு தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்ததுப் போல் ஆகாமல் பளபளக்கும்.
– என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

The post பொங்கலுக்கு வீடு சுத்தம் செய்யப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article