பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்

4 months ago 40
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடலூரைச் சேர்ந்த விஜய் என்ற மாணவன் தலைவாசல் அருகே தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில் கல்லூரி முடிந்து தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவழிச்சாலையில் சாலை விதிகளை மீறி வலதுபுறம் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த கார் மீது மோதமல் இருக்க இடப்புறம் திருப்பியபோது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதிய காட்சி சிசிடிவியில் பதிவானது.
Read Entire Article