போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்

1 month ago 5

போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடங்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும். முதலில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி, முடித்த பிறகு தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தலை நடத்தலாம். இதற்கிடையே, ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

Read Entire Article