பேஸ்புக்கில் பதிவிட வந்த தைரியம் போலீசில் சொல்ல வரவில்லையா..? பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நடிகைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

1 month ago 4

டெல்லி: சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் 2016-ல் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சித்திக் மீது காவல்நிலையத்தில் நடிகை புகார் அளித்தார். தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சித்திக்கின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு தற்போது புகார் அளித்துள்ளதாகவும், விசாரணைக்கு சித்திக் ஒத்துழைத்து வருவதாகவும் அதனால் அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் எனவும் சித்திக் சார்பில் வாதிடப்பட்ட நிலையில், இதற்கு கேரள அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பேஸ்புக்கில் பதிவிட தைரியம் கொண்ட பெண்ணுக்கு காவல்துறையில் புகார் அளிக்க 8 ஆண்டுகளாக தைரியம் இல்லையா..? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

The post பேஸ்புக்கில் பதிவிட வந்த தைரியம் போலீசில் சொல்ல வரவில்லையா..? பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நடிகைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article