பேருந்துகள் மோதி விபத்து: டிரைவர்கள் வாக்குவாதம், பயணிகள் அவதி

3 months ago 15

 

கூடுவாஞ்சேரி, அக்.14: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் தாழ்தள பேருந்தும், சாதாரண பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் டிரைவர்கள் சண்டைபோட்டதை அடுத்து, பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிலையம் உள்ளது. இங்கு சென்னை, கோயம்பேடு, பிராட்வே, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், கோயம்பேடு செல்லக்கூடிய தாழ்தள மாநகர பேருந்தும், கொட்டமேடு செல்லக்கூடிய சாதாரண அரசு பேருந்தும் நேற்று முன்தினம் இரவு பயணிகளை இயற்றிக் கொண்டு கிளம்பியது. அப்போது இரண்டு பேருந்தும் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக் கொண்டது. அப்போது 2 பேருந்துகளிலும் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதில் இரண்டு பேருந்துகளின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி சிதறின. இதைத்தொடர்ந்து 2 பேருந்துகளின் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதுகுறித்து அரசு மற்றும் மாநகர பேருந்துகளின் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

The post பேருந்துகள் மோதி விபத்து: டிரைவர்கள் வாக்குவாதம், பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article