சென்னை : காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. இந்த இலவச பயண அட்டை மூலம் கட்டணமில்லா பயணத்துக்கு நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது . பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அட்டையை காண்பிக்க தவறினால் நடத்துனர்கள் அபராதம் வசூலிக்கலாம் என்றும் போக்குவரத்துதுறை தகவல்.
மேலும் பயண அட்டையை போலீசார் தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, போலீசார் கட்டாயம் வாரண்ட் பெற வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள காவலர்களுக்கு பயண அட்டை : போக்குவரத்துதுறை தகவல் appeared first on Dinakaran.