கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் என்று எஸ்பி வருண்குமார் கூறுகிறார் என்பது தெரியவில்லை.
இவர் அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார். உண்மையான தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி பேச மாட்டாய். பேசும் போது பார்த்து பேச வேண்டும். நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டு இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி. தவறு என்றால் தவறு.
எந்த புயல் பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்து விட்டு பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய அரசு உதவுவது இல்லை. இதனை கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள்.
குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது கேவலமானது. நான் என்ன கறி வேண்டுமானாலும் உண்பேன். உனக்கென்ன? இவ்வாறு அவர் கூறினார்.
The post பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய அரசு உதவுவதில்லை: சீமான் பேட்டி appeared first on Dinakaran.