பேராவூரணியில் மழையால் வீடு சேதம்

2 months ago 12

 

பேராவூரணி , நவ.20: பேராவூரணி அருகே மழையால் கூரை வீடு சேதமடைந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார். பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு மேற்க்கொண்ட எம்எல்ஏ அசோக்குமார்,பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு ஊரணி குளக்கரைத் தெருவை சேர்ந்த கணவரை இழந்த ஜோதி என்பவர் வசித்து வந்த கூரை வீடு முற்றிலும் சேதமடைந்த தகவல் அறிந்து ஜோதியின் வீடு தேடிச்சென்று ஆறுதல் கூறி ரூ. 5,000 நிதி உதவி வழங்கினார்.அப்போது, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுபசேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், கிளைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பேராவூரணியில் மழையால் வீடு சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article