பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்

9 hours ago 1

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆத்தாளூர் கிராமத்தில் மேற்கு திசை நோக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலின் திருவிழா, கடந்த 1ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

நேற்று புதன்கிழமை ஒன்பதாம் நாள் திருவிழாவில் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

விழாவில் களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல், ஆத்தாளூர், நாடாகாடு, பூக்கொல்லை, மாவடுகுறிச்சி, இந்திராநகர், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை , பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article