சென்னை: மாநில சுயாட்சி அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை: திமுக என்ற கட்சி தொடங்கியதே தேச பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்றுவரை, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் மாநில சுயாட்சி என்ற முகமூடி. திமுகவின் இந்த பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சிக்கானவை அல்ல.