'பேட்மேன்' பட நடிகர் வால் கில்மர் காலமானார்

23 hours ago 1

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஹாலிவுட்டில் 80 மற்றும் 90களில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் வால் கில்மர்(65). இவர் டாப் கன், பேட்மேன் பாரெவர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

'பேட்மேன் பாரெவர்' படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். கில்மருக்கு 2014-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்டார்.

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான டாப் கன்: மேவரிக் படத்தில் டாம் குரூஸுடன் நடித்திருந்தார். இந்நிலையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால் கில்மர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்திருக்கிறார்.

'பேட்மேன்' பட நடிகர் வால் கில்மர் காலமானார், நிமோனியா காய்ச்சலுக்கு பலி #Batman #ValKilmer pic.twitter.com/LmWPOYoauD

— Thanthi TV (@ThanthiTV) April 2, 2025
Read Entire Article