திருக்காட்டுப்பள்ளி, மார்ச்30: பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருந்த மறியல் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது. பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் வரும் 3ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகளுடன் தொடர்புடைய அலுவலர்களான ஊராட்சி ஒன்றிய ஆணையர் சேக் அப்துல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்அறிவானந்தம்(கிராம ஊராட்சி), காவிரி கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் வியாகுலசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஆர்.ஐ. தமிழ்வாணன், விஏஓ சுப்பிரமணியன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைவர் ராஜ்குமார், பொறுப்பாளர்கள் இளங்கோ, அய்யனாபுரம் நடராஜன், காமராஜ், கிதியோன், அறிவுச்செல்வன், விமல் பிரபாகரன், தர், கலைஞர், ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோரிக்கைகளை ஒரு வாரத்தில் இருந்து 15 நாட்களுக்குள் நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து நடக்க இருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவித்தனர்.
The post பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.