பேச்சுவார்த்தை நடத்துவது சரணடைவது ஆகாது - இத்தாலி பிரதமர் மெலோனி

3 months ago 20
ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சரணடைவது ஆகாது என்றும் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். அதற்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக வேண்டுமானால், நட்பு நாடுகள் தங்களது உதவியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார். மெலோனியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஷ்யாவுக்குள் நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்காவும் பிரிட்டனும் அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஐ.நா வழிகாட்டுதலின்படி, நியாயமான முறையில் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் தலைவர்கள் முயற்சித்து வருவதாக மெலோனி தெரிவித்தார். 
Read Entire Article