பெள்ளேபாளையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

4 weeks ago 7

 

மேட்டுப்பாளையம், டிச.16: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தென் பொன்முடி சத்யா நகர் ஆதிதிராவிடர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு பொதுசுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று வளாகம் திறக்கப்பட்டது.

முன்னதாக சுகாதார வளாகத்திற்கு வாழை மரம் கட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் கிரிஜா தங்கவேல், திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சாந்தாமணி, கிளை செயலாளர்கள் தங்கராஜ், கணேசன், சந்தோஷ், ராமசாமி, ஒப்பந்ததாரர் பிரதீப் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பெள்ளேபாளையத்தில் சுகாதார வளாகம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article