பெற்றோர் எதிர்ப்பு... ஆட்டோவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை

11 hours ago 1

பெங்களுரூ,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா முனவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா யாதவ்(வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ரச்சிதா(26). இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரச்சிதாவின் பெற்றோர் அவருக்கு, வேறொரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இதை ராகவேந்திராவிடம் ரச்சிதா தெரிவித்தார். அவர் ரச்சிதாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பேசினார். ஆனால் அவர்களது காதலுக்கு ரச்சிதாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதேபோல் ராகவேந்திராவின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் கோகாக் தாலுகா சிக்கனஹள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் ஆட்டோவில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article