பெர்ஃப்யூம் வாங்கும்போது பேக்கிங் பார்த்து அசந்துவிடக் கூடாது.தரமான பிராண்ட் என்பதை உறுதி செய்யவும்.எக்ஸ்பயரி டேட் செக் செய்யவும்.ஃப்ராக்ரன்சை ஸ்மெல் டெஸ்ட் செய்யவும்.மணிக்கட்டு பகுதியில் ஸ்பிரே செய்து எரிச்சலோ, அலர்ஜியோ ஏற்படுகிறதா என கவனிக்கவும்.குறைந்த PH அளவு, உதாரணமாக 5-6 இருந்தால் நல்லது.PH அளவு அதிகமுள்ள பெர்ஃப்யூமை நேரடியாக உடலில் பயன்படுத்தக் கூடாது.ஆடை அணிந்தபின் ஸ்ப்ரேசெய்யலாம்.ஜரிகை, பீட்ஸ் வேலைப்பாடுகள் மீது பெர்ஃப்யூம் ஸ்ப்ரேயானால் அவை கறுக்க நேரலாம். தவிர்க்கவும்எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பெர்ஃப்யூம் நீண்ட நேரம் ஃப்ராக்ரன்ஸ தரும்.வறண்ட சருமம் உடையோர் மாய்ஸ்ச்சரைசர் தடவியபின் பயன்படுத்தலாம்.பெர்ஃப்யூம் பயன்படுத்தியபின், அந்த இடத்தை தேய்த்து விட்டால், அதன் மூலக்கூறுகள் உடைந்து, காற்றில் கரைந்து விடும். அதனால் பெர்ஃப்யூம் பயன்படுத்திய பின் தேய்க்கக் கூடாது.
நார்மல் ஸ்கின், ஆயிலி, டிரை என நம் உடலுக்கேற்ப, சாக்லேட், ஆரஞ்ச், ரோஸ் என நம் மனம் கவர்ந்த ப்ராக்ரன்ஸ் உள்ள பெர்ஃப்யூமை தேர்வு செய்யவும். சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் கடைகளில் பெர்ஃபியூம்களை தேர்வு செய்யாமல் பிரத்தியேகமாக நறுமண திரவியங்களுக்காகவே இருக்கும் கடைகளில் பெர்ஃபியூம் வாங்குவது நல்லது. காரணம் அங்கேதான் நாம் வாங்க நினைக்கும் அத்தனை பிராண்டுகளுக்கும் தகுந்த டெஸ்டர்கள் வைத்திருப்பார்கள். போலவே ஒவ்வொரு பெர்ஃபியூம்களையும் எடுத்த உடனேயே உடலில் அல்லது கைகளில் அடித்து பார்க்காமல். அதற்கென வைத்திருக்கும் டெஸ்டிங் காகிதங்களில் அடித்து நறுமணத்தை முகர்ந்து பார்க்கலாம். ஒரு பெர்ஃப்யூமுக்கும் இன்னொரு பெர்ஃப்யூம்க்கும் இடையில் காப்பி பவுடர், சாம்பிராணி, உள்ளிட்ட மற்றொரு நறுமண பொருளை முகர்ந்து விட்டு மீண்டும் பெர்ஃபியூம்களை சோதனை செய்ய முழுமையான அனுபவம் பெறலாம். இதனால் ஒரு நறுமணத்திற்கும் இன்னொரு நறுமணத்திற்கும் இடையேயான வேறுபாடு நன்கு தெரியும்.
ஒரு சில பெர்ஃபியூம்கள் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். பொதுவாகவே எந்த நறுமணத்திற்கும் தலைவலி அல்லது குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்போர் குறிப்பிட்ட பிராண்டை தேர்வு செய்து விட்டு அந்த பெர்ஃபியூமை சோதனை முயற்சியிலேயே பயன்படுத்தி ஒரு அரை நாள் விட்டுவிட்டு அதில் எந்த அலர்ஜியோ அல்லது தலைவலி குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லை என்றால் வாங்கிக் கொள்ளலாம். அவசரப்பட்டு வாங்கிவிட்டு அதை பயன்படுத்தவும் முடியாமல் பணம் விரயமாகாமல் இப்படி செய்வதால் தவிர்க்கலாம். பெர்ஃபியூம்களை எப்போதும் அலுவலகம் செல்வதற்கு முன்போ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு அவசரமாக போட்டுக்கொண்டு செல்லக்கூடாது. குளித்தவுடன் உடல் நன்கு உலர்ந்த பின் பெர்ஃப்யூம்களை பயன்படுத்திவிட்டு சிறிது நேரம் காற்றில் உலர விட வேண்டும். அப்போதுதான் நம்மை சுற்றிலும் நறுமணம் நன்கு பரவும். இல்லையேல் வியர்வை துர்நாற்றத்துடன் பெர்ஃப்யூம் நறுமணமும் ஒன்றிணைந்து அருகில் இருப்பவரை முகம் சுளிக்க செய்துவிடும். எந்த நறுமணத்திற்கும் அலர்ஜி ஏற்படுவோர் வெள்ளரிக்காய், பழங்கள், உள்ளிட்ட இயற்கை சார்ந்த நறுமணங்களை தேர்வு செய்யலாம். இல்லை நீர் அடிப்படையிலான பாடி ஸ்ப்ரேகளை பயன்படுத்தலாம்.
– மல்லிகா குரு
The post பெர்ஃப்யூம் தேர்வு செய்வது எப்படி? appeared first on Dinakaran.