பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இந்தியா ஆளப்பட வேண்டும்: ஐகோர்ட் நீதிபதியின் கருத்தால் சலசலப்பு

2 months ago 10

அலகாபாத்: பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இந்தியா ஆளப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சட்டப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசுகையில், ‘பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இந்தியா ஆளப்பட வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும். பொது சிவில் சட்டமானது இந்திய அரசியலமைப்பு ரீதியாக தேவைப்படுகிறது. பொது சிவில் சட்டமானது, நாட்டின் ஒற்றுமை, பாலின சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகள் மட்டும் பொது சிவில் சட்டத்தை கோரவில்லை. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது’ என்று கூறினார். இவரது இந்த கருத்து குறித்து பல்வேறு ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுக்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பசுவதை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட வழக்கில் மேற்கண்ட கருத்துகளை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இந்தியா ஆளப்பட வேண்டும்: ஐகோர்ட் நீதிபதியின் கருத்தால் சலசலப்பு appeared first on Dinakaran.

Read Entire Article