ஈரோடு, பிப். 8: ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஐயப்பன் நகர். இங்குள்ள பழைய இரும்புக் கடை ஒன்றில், கெமிக்கல் ஏற்றிச் செல்லும் பழைய டேங்கர் லாரியில் இருந்த பாய்லர் ஒன்றை நேற்று உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, பாய்லரில் எஞ்சியிருந்த கெமிக்கல் கலந்த ஆயில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்த தீ கடையில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களிலும் பரவியது.
இதையடுத்து, அப்பகுதியினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் அசம்பாவிதம் ஏதுமின்றி தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பெருந்துறை அருகே பழைய இரும்பு கடையில் தீ appeared first on Dinakaran.