பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமாவளவன் கண்டனம்

4 hours ago 2

சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

பெரியாருக்கு எதிரான அவதூறுகள், சாதி ஒழிப்புக் கருத்தியல் மீதான வெறுப்பு அரசியலின் ஃபாசிசத் தாக்குதல். சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டும் என்கிற கிரிமினல் உத்தியில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னிறுத்தி இறுதிமூச்சு வரையில் தீவிரமாகக் களமாடிய தந்தை பெரியாரை அவர்களால் ஏற்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவோம்.

The post பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article