பெரியார் குறித்த சீமான் கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு

3 weeks ago 7

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை கூறினார். தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். மொழியையே இழிவாக பேசும் போது அப்புறம் என்ன சமூக மாற்றம். சீர்த்திருத்தம், அரசியல் இருக்கிறது. அடிப்படையே தவறாக உள்ளது. கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவரை எதிரி என்றீர்கள். திருப்பி பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி.

மதுவுக்கு எதிரான போராட்டத்தில்? ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார். அவரை பகுத்தறிவாளி என்று சொல்கிறார்கள். நான் ஒரு விவசாயி. என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை. இவ்வளவு தானே. அதற்காக மரத்தை வெட்டி சாய்த்தால் அது பகுத்தறிவா?. கள் இறக்க என்னுடைய தோட்டத்தில் அனுமதி இல்லை என்று தான் அறிவுள்ளவன் சொல்வான். சமூக நீதிக்கும், பெரியாருக்கும் சம்பந்தம் உண்டா?. சமூக நீதியை போராடி பெற்று தந்ததவர் ஆனைமுத்து தான்.

உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசினார். மேலும் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். இது சர்ச்சையான நிலையில், சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும் சீமான் மீது சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது;-

சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சீமான் சில கருத்துக்களை பேசி இருக்கிறார். பெரியார், பேசியது குறித்து, சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நான் தருகிறேன். இதனை பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்பது எனது கருத்து. பெரியார், பேசியதாக வெளியாகி இருந்த எத்தனையோ புத்தகங்களை அவர்கள் அழித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெரியார் பேசி இருக்கிறார். சீமான் பெரியார் பேசி இருப்பதாக கூறிய கருத்தை, பெரியார், எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதனை பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பெண்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார், பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதை போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது.

ஆனால் பெரியார், குறித்து சீமான் பேசியது சரிதான் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் ஒரு கருத்தை வைத்து இருக்கிறார்கள். சீமான் ஏன் சொன்னார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை ஈ.வெ.ரா., பேசி இருக்கிறாரா? என்று கேட்டால் அவர் பேசி இருக்கிறார். அதற்கான ஆதாரத்தை தர நான் தயார் என்பதை சொல்கிறேன். நான் இந்த கருத்தை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காலம் கடந்து விட்டது. அரசியல் மாறிவிட்டது. மக்கள் அரசியலை புதிய பார்வையில் பார்க்கிறார்கள். பெரியார், இதற்கு முன் பேசியது எல்லாம் பொதுவெளியில் பேசினால் ரொம்ப தவறாக போய்விடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Read Entire Article