பெரியப்பாவின் தலையை பீர் பாட்டிலால் உடைத்த தம்பி மகன்

2 months ago 24

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பரனூர் பள்ளி கூடம் தெருவில் உரியடி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பரனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் (50) என்பவரை செலவிற்காக ரூ.200 பணம் கேட்டு முருகனின் தம்பி அசோக்குமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அசோக்குமார் மகன் பூவரசன் என்பவர் கையில் வைத்திருந்த காலி பீர் பாட்டிலால் முருகனின் தலையில் அடித்துள்ளார்.

இதில், காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முருகன் கொடுத்த புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அருகே ரூ.200 பணத்துக்காக தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெரியப்பாவின் தலையை பீர் பாட்டிலால் உடைத்த தம்பி மகன் appeared first on Dinakaran.

Read Entire Article