பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் கைரேகை, புகைப்பட பிரிவுகள் ஆய்வு

2 months ago 12

 

பெரம்பலூர், டிச. 17: திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலுள்ள கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளிகலும் வருடாந்திர ஆய்வுகள்மேற்கொண்டார். திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் நேற்று பெரம்பலூரில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் கைரேகைப்பிரிவு, புகைப்பட பிரிவு, அ- பிரிவு, சம்பளபிரிவு, மாவட்ட பண்டகக்கிடங்கு உட்பட அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டும், பதிவேடுகளை சரிபார்த்தார்.

ஆய்வின்போது அந்தந்த பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு அவர்களின் பணியை மேம்படுத்தும் அறிவுறை வழங்கினார். இந்த ஆய்வுகளின்போது பெரம்பலூர் மாவட்டஎஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி மதியழகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்க டேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் கைரேகை, புகைப்பட பிரிவுகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article