பெரம்பலூர் அருகே சீட்டு பண மோசடி: பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு

2 months ago 10

பெரம்பலூர், டிச.3: பெரம்பலூர் அருகே சீட்டுப் பணம் நடத்தி ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை கிராமத்தில் வசிக்கும் வெற்றிவேல் மனைவி அம்பிகா, பொன்னுசாமி மனைவி கனகவல்லி, ராமராஜ் மனைவி சுகன்யா, செந்தில்குமார் மனைவி சண்முகப்பிரியா, முருகேசன் மனைவி கௌரி, செங்கமலை மனைவி அலமேலு, பிரகதீஸ்வரன் மனைவி முத்துலட்சுமி, மணிகண்டன் மனைவி சங்கீதா, ரவி மனைவி திவ்யா, சகாப்தீன் மனைவி ஹசீனா உள்ளிட்ட 13 பேர் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் அளித்தப் புகார் மனுவில், நாங்கள் காந்திநகர் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் மனைவி கௌசல்யா, மனோகரன் மனைவி காந்திமதி, அன்பழகன் மனைவி கவிதா மற்றும் ஜோதி உள்ளிட்டோர் சேர்ந்து கடை நடத்திவரும் சீட்டு நிறுவனத்தில் ரூ.2 லட்சம் சீட்டு, ரூ. 1 லட்சம் சீட்டு செலுத்தி வந்தோம். தற்போது 11 மாதங்கள் ஆகியும் ஒருருக்கும் பணம் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகின்றனர். பணத்தைக் கேட்டால் திருப்பித் தர முடியாது எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பலூர் அருகே சீட்டு பண மோசடி: பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article