பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் சிலையை அகற்றக்கூடாது

3 months ago 9

பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் புது பஸ்டாண்டில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சிலையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11மணிக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில சட்ட விழிப்புணர்வு அணி சதீஷ்குமார், கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெகநாதன், கடலூர்மாவட்டசெயலாளர் அருள் செல்வம், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெயராஜ், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் புது பஸ்டாண்ட் நுழைவாயில் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி முழு உருவச்சிலை தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அமைப்பதற்கு அப் போதைய பேரூராட்சியில் தீர்மானமும் உரிய அனுமதியும் பெறப் பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி புது பஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்கிற காரணத்தைக் கூறி உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி சிலையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பது விவசாய சங்கத் தலைவரின் மனதில் கடுமையான வருத்தத்தை உருவாக்கி உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு ஏற்கனவே இருந்து வரும் இடத்திலேயே உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி சிலை தொடர்ந்து இருப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் சிலையை அகற்றக்கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article