பென்னாகரம், ஏப். 4: கோடை வெயிலுக்கு இடையே, பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று திடீரென கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் முழுவதும், கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேர வெயிலால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்கினர். சாலைகளில் வாகன ேபாக்குவரத்து வெகுவாக குறைந்தது. பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ெதாடர்ந்து பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்யதது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் ெபாதுமக்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கினர். சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் உருவாகியது. தொடர்ந்து ஒகேனக்கல் மலைப்பாதையில் மேகமூட்டங்கள் சூழ்ந்தது. மலை முகடுகள் முதல் சரிவுகள் வரை வெண்மேக கூட்டம் தவழ்ந்து சென்றதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மலைப் பாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, மேகமூட்டத்தை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து
மகிழ்ந்தனர்.
The post பென்னாகரம் வட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை appeared first on Dinakaran.