பென்னாகரத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி

3 months ago 27

பென்னாகரம், செப்.29: பென்னாகரம் தனியார் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் சார்பில், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வனத்துறை சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் போடூர் டேம் பகுதியில் வனத்துறை சார்பில் தையல் பயிற்சியும், இதில் பெண்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கினர். நிறுவன இயக்குனர் தேவகி பரமசிவம், மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம், பழங்குடி நலத்துறை திட்ட அலுவலர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினர். இதில் பயிற்சி பெற்ற பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பென்னாகரத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article