பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மனு

7 months ago 34

 

திண்டுக்கல், அக். 1: கொடைக்கானல் அருகே வாழகிரி பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அமனுவில் தெரிவித்துள்ளதாவது: கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வாழகிரி பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

இதில் மல்லிகா மற்றும் அவரது கணவர் அருகிலுள்ள எஸ்டேட்டில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த சிலர் மல்லிகா மற்றும் அவரது கணவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியுள்ளனர். அவர்கள் மீது புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

The post பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மனு appeared first on Dinakaran.

Read Entire Article