பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர் கைது

2 months ago 7

பாலக்கோடு, டிச.4: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த போலுகான் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து. இவரது மனைவி நாகவள்ளி (25). இவர் நேற்று முன்தினம் மாலை திம்மராயனஅள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போலுகான் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முத்து (47) என்பவர் நாகவள்ளியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது, அவர் கூச்சலிடவே கணவர் முத்து மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர். நாகவள்ளியிடம் தவறாக நடக்க முயன்ற லாரி டிரைவர் முத்துவை பிடித்து மகேந்திரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி முத்துவை கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article