பெண்கள் மேம்பாட்டில் உதவும் இணையதளங்கள்!

5 hours ago 3

ஒரு நாட்டின் பிரதான வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் வளர்ச்சி, வாழ்வாதாரங்களும் மிக முக்கியம். 10வது வகுப்பு, +2 பட்டம், விவசாயம்/மருத்துவம்/கால்நடை வளர்ப்பு/ மீன் வளப் பல்கலைக் கழக பட்டப்படிப்பு ஆகிய அனைத்திலும் மகளிர் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் முதல் மதிப்பெண்களையும் அதிகம் மகளிர் தான் பெறுகின்றனர். பல லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் பெற்று பல சிறு தொழில்களைச் செய்து வருகின்றனர். பல பெண்கள் தகுந்த தொழிலுக்கான பயிற்சிகள் பெற்று சரியான தொழில் துவங்கி கடனையும் ஒழுங்காய் கட்டி வருகின்றார்கள். தேசிய, மாநில மகளிர் மேம்பாட்டு கழகங்கள் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்து பயிற்சி, கடன், மானியம், மார்க்கெட்டிங் செய்ய உதவி என பல வழிகளில் மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவித்து வருகின்றனர். கல்வியிலும் கூட மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செய்து வருகின்றன.

தமிழ்நாடு (SIDCO) சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு என சிறப்பு தொழில் பேட்டைகளை, திருமுல்லைவாயல், வாழவந்தான் கோட்டை, கப்பலூர் போன்ற இடங்களில் நிறுவியுள்ளது. இவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டு பெண்கள் தொழில் செய்து வருகின்றனர். மேலும் சிட்கோ நிறுவனம் பல மாடி கட்டடங்களை கட்டி சிறு தொழில்களுக்கு அதாவது ஆடைகள் தயாரிப்பு, தோல் ஆடை உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் தொழில்கள் செய்ய வாடகைக்கு பெண்களுக்கு கொடுத்து வருகின்றனர். பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சிகள், கடனுதவிகள், மானியங்கள், சட்ட ரீதியான உதவிகள் என பல வசதிகளை மத்திய , மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இதுகுறித்த முழு விபரங்கள் பெற சில இணையதளங்களும் உள்ளன. அவற்றின் லின்க்குகள் மற்றும் பணிகள் குறித்த பட்டியல் இதோ.

1.www.byst.online
<http://www.byst.online>
இளம் ஆண்/பெண் தொழில்முனைவோருக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது BYST. ‘‘Smart Training for Enterprise Planning (STEP)” போன்ற திட்டங்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்தல், வணிக திட்டம் தயாரித்தல், நிதி உதவிகளையும் வழங்குகிறது.

2.www.wcd.gov.in
<http://www.wcd.gov.in>
மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கான கொள்கைகள், சட்டமன்றத் திட்டங்களையும் வடிவமைத்தல் மற்றும் செயல் படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது இந்த இணையம். மேலும் இந்திய அளவிலான மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நிதி உதவிகள், சலுகைகள், அவர்களுக்காக இயக்கப்படும் புதிய திட்டங்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் குறித்து இதில் தகவல்கள் பெறலாம்.

3. www.tnsocialwelfare.org/lander <http://www.tnsocialwelfare.org/lander>
தமிழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்காக செயல்படும் பிரதான துறை.இது வழியாக, மாநில மகளிர் வள மையம் (State Resource Centre for Women – SRCW), மகளிர் ஹெல்ப்லைன் – 181, மகளிர் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள், சிறப்பு இல்லங்கள், வார்டுகள் மற்றும் ஆதரவுத் தளங்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன.

4. <https://tncdw.org/>
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் 1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி இணைப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பிரதானமாக சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

5. <https://www.niti.gov.in/>
மகளிர் தொழில்முனைவோர்களுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. நிதி உதவி பெறும் வழிகள், தொழில் முனைவு பயிற்சிகள், மென்டர்ஷிப் (Mentorship) சேவைகள் போன்றவைகளின் விவரங்கள் தொகுத்து இதில் வழங்கப்படுகின்றன. இந்தத் தகவல்கள், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

6. <https://msme.gov.in/>
மகளிர் தொழில்முனைவோர்களுக்காக உருவாக்கப்பட்ட முக்கிய நிதி உதவித் திட்டங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. Stand-Up India – பெண்கள் மற்றும் SC/ST தொழில்முனைவோர்களுக்காக வங்கிக் கடன் வழங்கும் திட்டம். Mudra Yojana – சிறு அளவிலான தொழில்களுக்கு வட்டியில்லா அல்லது குறைந்த வட்டியிலான கடன் உதவி, TREAD Scheme – தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சி மற்றும் நிதியுதவி உள்ளிட்ட சேவைகளை இந்த இணையத்தில் பெறலாம்.

7. <https://wep.gov.in/>
மகளிர் தொழில்முனைவோர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த இணைய தளம். இன்க்யுபேஷன் (Incubation) சேவைகள், தொழில்முனைவு பயிற்சி, வழிகாட்டல் மற்றும் மென்டர்ஷிப் வாய்ப்புகள் போன்றவை வழங்கப்படுகின்றன.WEP அமைப்பின் நோக்கம் – ஒரு மைய இடமாக இருந்து, பல்வேறு ஆதரவுகளை ஒரே இடத்தில் இணைப்பது.

8. <https://www.startupindia.gov.in >
தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முக்கியமான அரசுத் திட்டம்.இது வழியாக, Stand-Up India, NIDHI (National Initiative for Developing and Harnessing Innovations) போன்ற திட்டங்கள் மூலம், பெண்கள் மற்றும் பிற சமூக விளிம்புநிலையிலுள்ள குழுக்களுக்கு தொழில் தொடங்க உதவி, நிதி, ஆலோசனை வழங்கப்படுகிறது.

9. <https://www.ncw.gov.in/>
தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women – NCW) இந்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய அமைப்பு. 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆணையம், பெண்களின் உரிமைகள் மற்றும் நலனை பாதுகாக்க, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பணியாற்றுகிறது. சட்ட ரீதியான எந்த உதவியாக இருப்பினும், வழக்குகள் சார்ந்த சந்தேகங்கள் என அனைத்திற்கும் இந்த இணையம் உதவும்.

10. < https://scholarships.gov.in/>
தேசிய கல்வி உதவித்தொகைக்கான பிரத்யேகத் தளம் (National Scholarship Portal – NSP) இந்திய அரசின் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஒரு மைய ஆன்லைன் தளம். இந்தத் தளம் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாணவர் நலத்திட்டங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக பெண்கள் கல்விக்காக பல்வேறு நிதி உதவிகளை வழங்குகிறது.
– ஞானசேகர்
(தொழில் மற்றும் கல்வி ஆலோசகர்)

 

The post பெண்கள் மேம்பாட்டில் உதவும் இணையதளங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article