சென்னை: தமிழகத்தில் அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கான 'போஸ்' அமைப்பு கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டுமென உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை செயலர் கோபால் தலைமையில் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம், மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.