பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

6 months ago 20

மஸ்கட்,

9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் லீக்கில் வங்காளதேசத்தை சந்தித்தது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. மும்தாஜ் கான் 4 கோலும், தீபிகா, கனிகா சிவாச் தலா 3 கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் மலேசியாவை இன்று சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனா 8-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை நொறுக்கியது.

Read Entire Article