பெண்கள் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்...போட்டி அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ

3 months ago 21

புதுடெல்லி,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடர் வரும் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகளும் முறையே அக்டோபர் 24, 27 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது.

அனைத்து போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஆட்டங்கள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி அட்டவணை விவரம்;

முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 24 - அகமதாபாத் - மதியம் 1.30 மணி

2வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 27- அகமதாபாத் - மதியம் 1.30 மணி

3வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 27- அகமதாபாத் - மதியம் 1.30 மணி

Read Entire Article