பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

3 months ago 26

சார்ஜா,

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு.

இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்தமுறை இறுதிப்போட்டியில் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக்கில் நாளை இரவு 7.30 மணிக்கு நியூசிலாந்தை துபாயில் எதிர்கொள்கிறது. முதல் நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பிக்கும். அந்த வகையில் தற்போது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் பலரையும் கவர்ந்து வருகிறது.

Read Entire Article