
சென்னை,
அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணனுடன் லாஸ்லியா நடித்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில்,
'பெண்களை கடவுளாக பார்க்கும் சமூகம் மிகவும் ஆபத்தான சமூகம் என்று நான் நினைக்கிறேன். எதற்காக பெண்களை கடவுளாக பார்க்கிறார்கள். பெண்களை மனுஷியாக பாருங்கள். பெண்களை மனுஷியாக பார்த்து அவர்கள் மொழியில் உரையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதை இந்த படம் செய்திருக்கும் என நான் நம்புகிறேன்' என்றார்.