பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களால் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பது அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

5 hours ago 2

புதுடெல்லி: பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களால் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்களால், இந்தியாவின் அரசியலில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகளின் சுகாதாரம், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கானப் பெண்களைத் தேர்தல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுத்தியுள்ளன.

இதுதொடர்பாக எஸ்பிஐ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘2024ல் நடந்த லோக்சபா தேர்தலுடன் 2019 தேர்தலை ஒப்பிடும்போது கூடுதலாக 1.8 கோடி பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களின் வெளிப்பாடே இதற்குக் காரணமாகும். பெண்களிடையே 1% கல்வியறிவு அதிகரித்திருக்கிறது, 45 லட்சம் பெண்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்.

பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாக, 2024 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு இடையில் கூடுதலாக 45 லட்சம் பெண் வாக்காளர்கள் கல்வியறிவு மேம்பாட்டின் விளைவாக வந்துள்ளனர்.

மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளாலும், இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களால் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பது அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article