சென்னை: இணைய தளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் வழக்கறிஞர் ஒன்றிய அரசிடம் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிடுள்ளார்.
The post பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.