சென்னை: ‘‘பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு என்ற ‘வாட்ஸ் ஆப்’ குழு உருவாக்காப்பட்டுள்ளது. இதில், புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
சென்னை, வேப்பேரில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குழு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னிய பெருமாள், எஸ்.பி.ஈஸ்வரன் மற்றும் போலீசார், குழு உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.