சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 மதிக்கத்தக்க பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீஸார் கைது செய்து, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.