பல்லடம், பிப்.20:பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி பிரியா (38), இவர் பயணிகள் ஆட்டோ இயக்கி வருகிறார். அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் இங்கு ஆட்டோவை நிறுத்தக்கூடாது என்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணிக்காபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் என்னிடம் இங்கு வந்து பயணிகளை ஏற்றக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டோவில் இருந்த பயணிகளை இறங்கும்படி சத்தம் போட்டதால் அவர்கள் இறங்கி சென்றனர். எனவே தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஆட்டோ ஓட்டுனரான எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
The post பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு மிரட்டல் appeared first on Dinakaran.