பெண் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

6 months ago 30

திருமலை: தெலங்கானா மாநிலம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா நடிகர் நாக சைதன்யா- நடிகை சமந்தா விவாகரத்து செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் காரணம் என கூறினார். இதனால் நடிகர் நாகார்ஜுனா தனது குடும்பம் குறித்து அவதூறு பேசியதாக அமைச்சர் கோண்டா சுரேகா மீது நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி நடிகர் நாகார்ஜுனா, சாட்சியாக உள்ள சுப்ரியா ஆகியோரின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்த நிலையில் அமைச்சர் கோண்டா சுரேகா வரும் 23ம் தேதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருப்திகரமாக பதில் அளிக்கா விட்டால் அமைச்சர் நீதிமன்றத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

 

The post பெண் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article