பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 255 இடங்கள் பாதிப்பு

2 months ago 10

தண்டராம்பட்டு, டிச. 17: பெஞ்சல் புயலால் கடந்த ஒன்றாம் தேதி பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சாத்தனூர் அணையில் இருந்து 2ம் தேதி அதிகாலை ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பெண்ணையாறு மற்றும் துணை ஆறுகளான துறஞ்சலாறு ஆழியாறு பாம்பாறு ஆகிய ஆறுகளில் வெள்ளத்தில் காரணமாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆணைகள் ஆறுகள் அணைக்கட்டுகள் நீர் வரத்து கால்வாய்கள் ஏரிகள் குளங்கள் பெரும் வெள்ளத்தால் 255 பகுதிகள் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய தற்காலிக வெள்ள சீரமைப்பு பணிகள் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேற்று தென்பெண்ணை ஆறு வடிநிலம் கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார் உடன் செயற்பொறியாளர் அறிவழகன் உதவி செயற்பொறியாளர் ராஜாராம் உதவி பொறியாளர் சந்தோஷ் பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

The post பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 255 இடங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article