பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தில் சான்றுகள் இழந்த மாணவர்களுக்கு மறு சான்றிதழ்

2 months ago 11

சென்னை: பெஞ்சல் புயல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் பள்ளி மாணவ மாணவியர் தங்களின் பள்ளி சான்றுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களையும் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு சான்றுகளை வழங்க அரசு உத்தரவிட்டது.

அதன் பேரில் மேற்கண்ட மாவட்டங்களில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு, ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றுகளை இழந்த மாணவ, மாணவியர் தங்களது மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

The post பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தில் சான்றுகள் இழந்த மாணவர்களுக்கு மறு சான்றிதழ் appeared first on Dinakaran.

Read Entire Article